அரநாயக்கவில் பிக்கு உட்பட இருவர் மீது தாக்குதல், சந்தேக நபர் கைது

245 0

பிக்கு ஒருவர் உட்பட தேரருடன் சென்ற இருவர் மீது அரநாயக்கவில் தாக்குதல் நடாத்தப்பட்டு, வெட்டுக் காயங்களுடன் மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரநாயக்க சாமகம புனா பொகுன விகாராதிபதி ஒருவரும் அவருடைய சேவகர்கள் இருவருமே இவ்வாறு தாக்குதலுக்குற்பட்டுள்ளனர்.

காயமடைந்த தேரர் அரநாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய இருவரும் கேகாலை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் சென்றிருந்ததாகவும், அவர் இன்று (17) காலை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment