ரஷ்யாவில் தேயிலை உட்பட பெருந்தோட்டப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக இலங்கையில் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் வீ. ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த தடை உத்தரவானது மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் நேரடியாக பாதிப்புச் செலுத்தும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.