இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள அரச உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் தீர்மானம்?

217 0

அரசியல்வாதிகளுக்குப் புறம்பாக அரச அதிகாரிகளிடையேயும் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் காணப்படுவதாக முறைப்பாடுகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அரசாங்க உயர் மட்ட தகவல் வட்டாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக திரட்டுமாறும், இவர்களது விடயத்தில் உரிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இரட்டைப் பிரஜாவுரிமையுடன் அரச உயர் பதவிகளில் உள்ளவர்கள் தீர்மானங்கள் எடுக்கும் போது தான் சார்ந்துள்ள நாட்டுக்கு சார்பாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக முறைப்பாடுகள் அதிகம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அத்தகவல் வட்டாரங்கள் கூறியுள்ளன.

Leave a comment