தேர்தலின் பின்னர் JO-SLFP இணைந்து புதிய அரசாங்கம் – பிரசன்ன ரணதுங்க

277 0

உள்ளுராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டு எதிர்க் கட்சியும் இணைந்து புதிய கூட்டரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக கூட்டு எதிரணியின் ஏற்பாட்டாளர் பிரசன்ன ரணதுங்க எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதற்காக வேண்டி ஸ்ரீ ல.சு.கட்சி இரண்டு நிபந்தனைகளுக்கு உடன்படுமானால், எந்தவித பதவிகளையும் எதிர்பார்க்காமல் புதிய அரசாங்கமொன்றை அமைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீ ல.சு.க.யின் இரு குழுவினரிடையே நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைய காரணமாக கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள பிரசன்ன ரணதுங்க குற்றம்சாட்டப்படுகின்றார். இது குறித்து அவரிடம் கேட்டபோதே இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இப்பேச்சுவார்த்தை தோல்வியடைவதற்கு பிரதான காரணம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள அமைச்சர்களே ஆவர். இவர்கள் தங்களது அமைச்சுப் பதவிகளை துறப்பதற்கு தயாராக இருக்கவில்லை.

இதனைக் கருத்தில் கொண்டு, உள்ளுராட்சி சபைத் தேர்தலின் பின்னர், அவர்களது அமைச்சுப் பதவிகளை தக்க வைத்தவாறே புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பில்  சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a comment