கோவை அணியுடன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் இன்று மோதல்

358 0

201608311135167875_TNPL-Cricket-Kovai-team-today-clash-with-thoothukudi_SECVPF8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2-வது வெற்றியை பெற்றது.
சென்னையில் நேற்று நடந்த ஆட்டத்தில் அந்த அணி 48 ரன் வித்தியாசத்தில் ரூபி காஞ்சி வாரியர்சை வீழ்த்தியது. காஞ்சி வாரியர்ஸ் முதல் தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியின் 8-வது ‘லீக்’ ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஏம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. தூத்துக்குடி அணி தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை 45 ரன்னில் வென்று இருந்தது. அந்த அணி இன்று கோவை கிங்சை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.

தூத்துக்குடி அணியின் கேப்டன் தினேஷ் கார்திக் விளையாடாதது அந்த அணிக்கு சற்று பாதிப்பே. அவர் துலீப் கோப்பை போட்டியில் விளையாட சென்றுவிட்டார். ஏற்கனவே அந்த அணியை சேர்ந்த அபினவ் முகுந்தும் துலீப் டிராபியில் ஆடி வருகிறார். இதனால் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு இன்று ஆல்ரவுண்டர் கவுசிக் காந்தி கேப்டனாக செயல்படுவார்.

அந்த அணியில் சர்வதேச போட்டியில் ஆடிய எல்.பாலாஜி, வாஷிங்டன் சந்தர், சுசில், மாருதிராகவ், ஆகாஷ், சும்ரா, வுசிக், சீனிவாஸ், அஸ்வின் சினரஸ்ட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

கோவை கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் காஞ்சி வாரியர்சிடம் தோற்றது. சையது முகமது தலைமையிலான அந்த அணி தூத்துக்குடியை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள். எனவே இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.