கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய நான்கு சீனர்களை நைஜீரிய கடற்படை பல மணி நேர துப்பாக்கி சண்டைக்கு பின்னர் மீட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த 4 பேர் நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இருந்து ஓண்டோ நகருக்கு படகில் செல்லும் போது, கடற்கொள்ளையர்கள் அவர்களை கடத்திச் சென்றுவிட்டதாக நைஜீரியா கடற்படைக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து, நடுக்கடலில் கொள்ளையர்களிடம் துப்பாக்கி சண்டை நடத்தி சீனர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
கொள்ளையர்களால் சீனர்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ள கடற்படை தளபதி, அவர்களின் பெயர்களை வெளியிட மறுத்து விட்டார். இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் அந்நாட்டு தூதரகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.