திருக்கோவிலூர் அருகே குளோரின் கலக்காமல் குடிநீர் சப்ளை செய்த 3 பேர் சஸ்பெண்டு

336 0

201608311133513357_3-people-suspended-supply-of-drinking-water-to-without-mix_SECVPFதிருக்கோவிலூர் அருகே குளோரின் கலக்காமல் குடிநீர் சப்ளை செய்த 3 பேரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் லட்சுமி உத்தரவிட்டார்.குடிநீரால் பரவும் நோய்களை தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,099 பஞ்சாயத்துகளிலும் கடந்த 29-ந் தேதி முதல் ஒட்டுமொத்த துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகிற 2-ந் தேதி வரை இந்த பணி நடைபெற உள்ளது.
காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த பணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சோழ வாண்டிபுரம் கிராமத்தில் நடைபெற்று வரும் துப்புரவு பணிகளை கலெக்டர் லட்சுமி திடீர் ஆய்வு செய்தார். அப்போது குளோரின் கலக்காமல் குடிநீர் வினியோகம் செய்வது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையொட்டி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள் வேணு, நாகமுத்து மற்றும் ஊராட்சி செயலாளர் பெருமாள் ஆகியோரை ‘சஸ்பெண்டு’ செய்து கலெக்டர் லட்சுமி உத்தரவிட்டார்.

மேலும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா மீது தமிழ்நாடு குடிமைப்பணி விதியின் கீழ் விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.