248 உள்­ளூ­ராட்­சி­ மன்­றங்களுக்கு நாளை வேட்­பு­ம­னுத்­தாக்கல் ஆரம்பம்

257 0

உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் 248 க்­கான வேட்­பு­மனு  தாக்கல் செய்யும் நட­வ­டிக்கை நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ள­துடன் எதிர்­வரும் வியாழக்கிழமை நண்­ப­க­லுடன் அது நிறை­வ­டை­ய­வுள்­ளது.

நாடு தழு­விய ரீதியில் அமைக்­கப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் 341 இல் 93 சபை­க­ளுக்கு வேட்­பு­ம­னுத்­தாக்கல் செய்யும் அறி­வித்தல் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டது. அதற்­கி­ணங்க குறித்த சபை­க­ளுக்­கான வேட்­பு­மனுத் தாக்கல் கடந்த 11 ஆம் திகதி ஆரம்­ப­மா­ன­துடன் 14 ஆம் திகதி நண்­ப­க­லுடன் நிறை­வுக்கு வந்­தது.

இதே­வேளை வேட்­பு­ம­னுத்­தாக்கல் செய்­வ­தற்­கான அறி­வித்தல் கடந்த நான்காம் திகதி வெளி­யான உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் 248 இற்­கான வேட்பு மனுத்­தாக்கல் செய்யும் நட­வ­டிக்கை நாளை ஆரம்­ப­மா­வ­துடன் எதிர்­வரும் 21 ஆம் திகதி நண்­ப­க­லுடன் நிறை­வுக்கு வர­வுள்­ளது.

எனவே நாளை முதல் எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை நண்­பகல் வரையும் வேட்பு மனுத்­தாக்கல் செய்­யப்­பட வேண்­டி­யுள்ள 248 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்­கான வேட்­பு­மனு தயார் செய்யும் பணியில் கட்­சிகள் மும்­முரம் காட்டி வரு­கின்­றன. இதே­வேளை குறித்த சபை­க­ளுக்­கான வேட்பு மனுத்­தாக்கல் செய்­யப்­பட்ட பின்­னரே தேர்தல் நடை­பெறும் தினம் பற்­றிய உத்­தி­யோ­க­பூர்வ அறி­வித்தல் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

தொகு­தி­வாரி மற்றும் விகி­தா­சாரம் கொண்ட கலப்பு தேர்தல் முறை­யூ­டாக இம்­மு­றை­ந­டை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கென 341 உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அம்­மன்­றங்­க­ளுக்கு எண்­ணா­யி­ரத்து முன்­னூற்று ஐம்­பத்­தாறு உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

இதே­வேளை இறு­தி­யாக விகி­தா­சார முறையில் நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் போது நாட்டில் முன்­னூற்று முப்­பத்­தைந்து உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் இருந்­த­துடன் அம்­மன்­றங்­க­ளுக்கு நான்­கா­யி­ரத்து நானூற்று எண்­பத்­தாறு உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­பட்­டனர்.

ஆகவே புதிய தேர்தல் முறை­யூ­டாக நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் கடந்த தேர்­த­லை­விட ஆறு உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மேல­தி­க­மாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அதற்­கி­ணங்க அக­ர­ப­தன, கொட்­ட­கல, மஸ்­கெ­லிய, நோர்வூட், பொல­ந­றுவை ஆகிய பிரதேச சபைளும் பொலநறுவை மாநகர சபையுமே புதிய உள்ளூராட்சி மன்றங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே தற்போது நாட்டில் மொத்தமாக இருநூற்று எழுபத்தாறு பிரதேச சபைகளும், 24 மாநகர சபைகளும், நாற்பத்தொரு நகரசபைகளுமாக பிரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment