பொலிஸ் மா அதிபரின் விசேட பணிப்புரையின் கீழ் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட 722 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
நேற்று அதிகாலை 1.00 மணி முதல் 5 மணி வரை மேற்கொள்ளப்பட்ட 4 மணி நேர தேடுதல் நடவடிக்கைக்கு 14,706 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 10 பொலிஸ் நாய்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை வைத்திருந்த 586 பேரும் இதில் அடங்குகின்றனர். 6 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் கூறியுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.