நாட்டின் பல பாகங்களிலும் இன்று முதல் மழையுடன் கூடிய காலநிலை

241 0

நாட்டின் பல பாகங்களிலும் இன்று (17) மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் இந்நிலை அடுத்துவரும் சில நாட்களுக்கு தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் எனவும் திருகோணமலை முதல் ஹம்பாந்தோட்ட வரையுள்ள கடல் பகுதியில் மழையுடன் கூடிய கால நிலை காணப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது

Leave a comment