இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மலேஷிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக் இன்று (17) காலை இலங்கை வந்தடைந்துள்ளார்.
அவர் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை தங்கியிருக்கும் இவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசவுள்ளார்.
அத்துடன், விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் புதிய உற்பத்திகள் என்பன தொடர்பில் இரண்டு நாடுகளுக்கிடையில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மலேசியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு கொழும்பின் பல வீதிகள் தற்காலிகமாக மூடப்படும் என போக்குவரத்துப் பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.