ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் சில தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (16) முற்பகல் இடம்பெற்றது.
அந்தவகையில் எம்.எஸ்.எம் சகாவுல்லாஹ் நீர்கொழும்பு தொகுதி இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர்களாக டீ.ஆர். இந்து குணதிலக, எம். நிஹால் விஜயானந்த மற்றும் ஜீ.கே. உபாலி சந்திரசேன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஷத்ரிய ராஜபுத்ர வீரசிங்க மற்றும் மஹிந்த பண்டார பக்மீவெவ ஆகியோர் குருநாகல் மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை மாவட்ட அமைப்பாளராக சந்திரநாத் வீரமனும் திகாமடுல்லை மாவட்ட அமைப்பாளராக வை.ஜீ. பந்துல சரத் குமாரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.