மக்கள் கவலை இல்லாமல் வாழ்கின்ற நிலமையை ஜ.தே.கட்சியே உருவாக்கியது!- ரவி

272 0

நாட்டில் மக்கள் எந்த கவலையும் இல்லாமல் வாழ்கின்ற நிலமையை ஜக்கிய தேசிய கட்சியே உருவாக்கியுள்ளதாக அமைச்சர் ரவிகருணநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ளுராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்காக ஜக்கிய தேசிய கட்சியானது வேட்பாளர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டிருந்தது.

இந்நிகழ்விற்கு வந்திறிருந்த அமைச்சர் நிகழ்வின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இவ் உள்ளுராட்சி தேர்தலானது யாழ்ப்பாணத்தில் ஒர் முக்கிய தேர்தலாக பார்க்கப்படுகின்றது. இ

லங்கை பொறுத்தவரையில் முழு நாட்டிலும் போட்டியிடுகின்ற ஒரு கட்சியாக எமது ஜக்கிய தேசிய கட்சியே உள்ளது. இதனை ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் செயற்படுத்தி வருகின்றனர்.

மேலும் நாட்டில் மக்கள் எந்தவிதமான கவலையும் பயமும் இல்லாத ஒரு சூழ்நிலையை ஜக்கிய தேசிய கட்சியே ஏற்படுத்தி தந்துள்ளது.

அந்தவகையில் இம்முறையும் மக்கள் ஜக்கிய தேசிய கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a comment