யாழ்ப்பாணம் – சங்கானை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 14 ஆம் திகதி இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அயல் வீட்டில் இருந்த வந்த பூனையொன்று கடித்துள்ளது.
அதன்பின்னர் அவர் யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மனைவி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் தொடர்பான மரண விசாரணைகள் நடத்தப்பட்டதன் அடிப்படையில் விஷம் உடலில் பரவியதன் காரணமாக மரணம் சம்பவித்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி அது கொலையல்ல எனவும் பூனையொன்று கடித்ததன் காரணமாக விஷம் பரவி மரணம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்டமருத்துவ அதிகாரியின் அறிக்கையின் படி உயிரிழந்த நபரை கடித்த பூனைக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அந்த பூனையை மருத்துவமனைக்கு எடுத்து வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.