நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 163 ஆவது நாடாக நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச உடன்படிக்கை சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.
நிலக் கண்ணிவெடித் தடை சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதைத் தொடர்ந்து இவ்வுடன்படிக்கையில் இன்னும் சேராத நாடுகள் இலங்கையை முன்னுதாரணமாகக் கொண்டு அதனைப் பின்பற்றவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் உஸ் தெரிவித்துள்ளார்.