போதைப் பொருள் குற்றச்சாட்டின் பேரில் பொலன்னறுவைச் சிறைச்சாலையில் நீதிமன்றத்தினால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 15 வயதுடைய நபர் ஒருவர் இன்று (16) காலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலன்னறுவைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரணவக்க ஆரச்சிலாகே மலித் ரணவன எனும் பெயரையுடைய பதியதலாவ மாவித்தாவெல இல. 79 இல் வசிக்கும் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் அறிவித்துள்ளனர்.
இவர் தொடர்பிலான விசாரணைகள் பொலன்னறுவைப் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.