மாத்தளையில் பல நிகழ்வுகள் இடைநிறுத்தம்- தேர்தல்கள் ஆணைக்குழு தலையீடு

278 0

மாத்தளையிலுள்ள பல பிரதேசங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுக்கு புத்தகங்கள் விநியோகிக்கும் பல நிகழ்வுகள்  தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதி அமைச்சர் லக்ஷ்மன் வசந்தவின் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியிருந்தன.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது சட்டவிரோதமானது என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a comment