உள்ளூராட்சி மன்ற தேர்தலுடன் தொடர்புடைய 6 முறைப்பாடுகள் இதுவரையில் பதிவாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இதன் இறுதி முறைப்பாடுகள் இரண்டும் மொரகஹஹேன மற்றும் அம்பாறை காவற்துறை அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில் பதிவாகியுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
போலியான கையெழுத்தை இட்டு தேர்தல் வேட்புமனுவை தயாரித்தல் மற்றும் வேட்பாளரின் பதாதையொன்றை அகற்றியது தொடர்பில் குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவற்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.