திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணொருவரின் வீட்டினுள் அத்துமீறி உள் நுழைந்த இளைஞர் ஒருவரை நேற்று (15) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை, ஐந்தாம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை பிரதேச வாசிகளின் உதவியுடன் மடக்கிப் பிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்ததினால் அந்த பெண் கூக்குரலிட்டு அயல் வீட்டார்களின் உதவியை நாடியுள்ளார்.
சந்தேக நபர் களவெடுக்கும் நோக்கில் சென்றாரா அல்லது குறித்த பெண்ணின் வீட்டுக்கு வேறு தேவைகளுக்கு சென்றாரா என்ற நோக்கில் விசாணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவரை தற்போது தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இன்று (16) திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.