4 ஆண்டுகளுக்கு முன்பு ஆணாக மாறிய பெண் குழந்தை பெற்றார்

436 0

இங்கிலாந்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆணாக மாறிய பெண் அறுவை கிசிச்சை மூலம் அழகான குழந்தையை பெற்றெடுத்தார்.

இங்கிலாந்தில் உள்ள பியோனிஸ் நகரை சேர்ந்தவர் கச்சி சுல்லிவான். இவர் பெண்ணாக பிறந்து வளர்ந்தவள். ஒரு ஆணுடன் இவருக்கு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.

அதன் பின்னர் 4 ஆண்டுகளுக்கு பிறகு இவர் ஹார்மோன் சிகிச்சை மூலம் ஆணாக மாறினார். இதையடுத்து ஸ்டீவென் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் வாழ்ந்த அவர் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. பிரசவ வலி ஏற்பட்டவுடன் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அருக்கு சுகபிரசவம் ஆகவில்லை. எனவே ஒரு வாரம் கழித்து அறுவை சிகிச்சை மூலம் அழகான குழந்தையை பெற்றெடுத்தார்.

அதன்மூலம் பெண்ணாகவும், ஆணாகவும் இருந்து குழந்தை பெற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்றார். இவர் வர்த்தகவியல் பட்டம் படித்துள்ளார்.

Leave a comment