ஐ.தே.க.யின் வேட்பு மனுவில் கட்சியின் பெயருக்கு பதிலாக செயலாளரின் பெயர்- JO

296 0

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுவில் பாரிய தவறுகள் காணப்பட்ட போதிலும் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், தமது கட்சியின் சிறு தவறுகளுக்காக வேட்பு மனுக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எமது வேட்பு மனுவிலும் சிறு தவறுகள் காணப்படுகின்றமையை ஏற்றுக் கொள்கின்றோம். இருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுவில் கட்சியின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிமின் பெயர் இடப்பட்டுள்ளதாவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment