கூட்டு எதிர்க் கட்சியினர் வேட்பு மனு தயாரிக்கும் போது பேராசிரியர் ஜி.எல். பீரிஸிடம் ஆலோசனை பெறாமல், சட்டத்தரணிகளிடம் பெற்றிருந்தால் இவ்வாறு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்காது என பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனு தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவரிடம் வினவிய போதே இதனைக் கூறியுள்ளார்.
ஐ.தே.க.யின் வேட்பு மனுக்களில் எந்தக் குறையும் இல்லை. கூட்டு எதிர்க் கட்சியின் வேட்பு மனுவில் காணப்படுவது போன்ற எந்தக் குறையும் தமது மனுவில் இருக்கவில்லை.
கைச்சாத்திட்ட திகதி இன்மை, கட்சியின் செயலாளருடைய ஒப்பம் இன்மை என்பன சிறிய தவறுகள் அல்ல. கூட்டு எதிர்க் கட்சி தனது வெட்கத்தை மறைத்துக் கொள்ள இவற்றை சிறிய தவறுகளாக காட்ட முயற்சிக்கின்றது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.