குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண இம்மாதம் முதல் நடவடிக்கை- அமைச்சர் சம்பிக்க

243 0

நாடு முழுவதுமுள்ள குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இம்மாதம் முதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப் போவதாகவும் இதற்கு அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் தடையாக வரவேண்டாம் எனவும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்தார்.

கம்பஹாவில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற புதிய பஸ் தரிப்பு நிலைய திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

நாம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முயற்சித்த சந்தர்ப்பங்கள் அனைத்திலும் அரசியல் கட்சிகள் தடையாகவே செயற்பட்டதாகவும், இதனாலேயே அம்முயற்சிகள் கைவிடப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Leave a comment