ஸ்ரீயானி விஜேவிக்ரமவுக்கு எதிராக கட்சி சட்ட நடவடிக்கை- தினேஷ்

271 0

ஸ்ரீயானி விஜேவிக்ரமவுக்கு எதிராக தமது கட்சியின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக மஹஜன எக்ஸத் பெரமுன கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

தமது கட்சியினருக்கு வேட்பு மனுவில் பெயர் வழங்குவதில் சிக்கல் இருந்தமை உண்மைதான். அதற்காக தமது எதிரியுடன் கூட்டுச் சேர்வதற்கு தமது கட்சியில் அவருக்கு வாக்களித்த மக்கள் விரும்புவதில்லை.

எதிர்வரும் தேர்தலில் அவருக்கு மக்கள் ஆதரவு இல்லையென்பது தெரியவரும். கட்சியின் வாக்கினால் தெரிவான அவர், கட்சியிலுள்ள மக்களின் விருப்புக்கு எதிராக செயற்படுத்த முடியாது எனவும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.

Leave a comment