சுப நேரம் பார்த்து வேட்பு மனுத் தாக்கல் செய்வதும் நிராகரிப்புக்கு காரணம்- மஹிந்த

270 0

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் தமக்கு நியாயம் கேட்பதில் தவறில்லையெனவும், இதுவரையில் நீதிமன்றத்தில் இவ்வாறு சென்ற வழக்குகள் தேர்தல்கள் செயலகத்தின் நடவடிக்கைக்கு எதிராக அமைந்ததில்லையெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கட்சிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு சுப நேரம் பார்த்து வீட்டிலிருந்து வருகை தந்து, சுப நேரத்தில் எம்மிடம் வேட்பு மனுவை ஒப்படைக்கும் போது நாம் சொல்லும் விடயங்களை கேட்பதற்கு அவர்களுக்கு நேரம் கிடைக்காமல் போகிறது. இதுவும், அவர்களது வேட்பு மனு நிராகரிக்கப்படக் காரணமாகும்.

வேட்பு மனுத் தயாரிப்பில் உரிய நிபந்தனைகளை கருத்தில் கொள்ளாமை இவ்வாறு நிராகரிப்புக்கு பிரதான காரணம் ஆகும். தமக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் வேட்பு மனுக்களை தயார் செய்துள்ள கட்சிகளின் மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

எமக்கு உணவு சமைத்துக் கொடுக்க முடியும். அதனை சாப்பிடுவதற்கு போட்டுக்  கொடுக்கவும் முடியும். அதனை வாயில் போடச் செய்யவும் முடியும். ஆனால், விழுங்கச் செய்ய எம்மால் முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் கூறினார்.

Leave a comment