ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம் செய்கிறார்.
ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (17-ந்தேதி) பிரசாரம் செய்கிறார்.
நாளை மாலை 4.30 மணிக்கு 39-வது வட்டம் கடற்கரை சாலை வழியாக பிரசாரத்தை தொடங்கும் அவர் வீரராகவன் ரோடு, செரியன் நகர் 2வது தெரு, 3வது தெரு, செரியன் நகர் மெயின்ரோடு, 4வது தெரு, அசோக்நகர் மெயின் தெரு, கண்ணப்பன் தெரு ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
மாலை 5.15 மணிக்கு இருசப்பன் மெயின் தெரு, கடற்கரை சாலை சர்வீஸ் ரோடு, ஆவூர் முத்தையா தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, புச்சம்மாள் தெரு, பூண்டி தங்கம்மாள் தெரு, நாகூரான் தோட்டம் ஆகிய இடங்களில் வாக்கு சேகரிக்கிறார்.
மாலை 6 மணிக்கு 43வது வட்டம் பாலகிருஷ்ணன் தெரு, கடற்கரை சாலை, பவர்குப்பம், சிங்காரவேலன் நகர், எஸ்.என்.செட்டி சாலை, சி.ஜி.காலனி பகுதியில் பிரசாரம் செய்கிறார்.
மாலை 6.45 மணிக்கு ஜிவரத்தினம் சாலை, விநாயகபுரம், பி.பி.கோவில் தெரு, தாண்டவராயன் தெரு, கணக்கர் தெரு சந்திப்பு பகுதியில் வாக்கு சேகரிக்கிறார்.
இரவு 7.30 மணிக்கு 42வது வட்டம் சேனியம்மன் கோவில் தெரு, ரெட்டை குழி சந்து, மேட்டுகடை பகுதியில் பிரசாரம் செய்கிறார்.
இரவு 8.15 மணிக்கு வீரா குட்டி தெரு, கோதண்ட ராமன் சந்து, கோதண்ட ராமன் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, அண்ணா சிலை, எம்.சி.எம். கார்டன் 3வது தெரு, மேயர் பாசுதேவ் மெயின் தெரு, 2வது தெரு, ஆரணி ரங்கன் தெரு, இளைய முதலி தெரு பகுதியில் ஓட்டு வேட்டையாடுகிறார்.
இரவு 9 மணிக்கு 47வது வட்டம் ஆர்.கே.நகர் 2வது தெரு, தியாகப்பன் தெரு, மன்னப்பன் தெரு, பெருமாள் கோவில் தெரு, ஜவான்மல் சவுகான் தெரு, ஆகிய இடங்களுக்கு சென்று குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.