அமைச்சுப் பதவியின் சுகபோகங்கள் பரிபோகும் என்று அச்சம் கொள்ளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களே, அக்கட்சி இரண்டாகப் பிரிவதற்குக் காரணம் என முன்னாள் மேல் மாகாண முதமைச்சரும் தற்போதைய மஹிந்த குழு பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க் கட்சியுடன் கூட்டணி அமைக்க அமைச்சுப் பதவிகளை விட்டுவிட்டு வருமாறும் நாம் கூறினோம். அதற்கு உடன்பட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மறுத்தமையே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பலம் குறைவதற்கு காரணமாக அமைந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டு எதிர்க் கட்சியுடன் இணைவதற்கான பேச்சவார்த்தை தோல்வியடைய அக்கட்சியிலுள்ள நாமல் ராஜபக்ஷவும், பிரசன்ன ரணதுங்கவும் தான் காரணம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்கையிலேயே ஊடகங்களிடம் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.