இலாபமீட்டும் நிறுவனமாக இ.ஒ. கூட்டுத்தாபனத்தை மாற்றுவேன் – புதிய தலைவர் சிதி பாரூக்

310 0

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு பௌதீக, மனித வளங்களையும் நவீன தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவதாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் சிதி பாரூக் தெரிவித்தார்.

புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிதி பாரூக் பதவியேற்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது உறையற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஊடக அமைச்சர் தன்மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கி வைத்தமைக்கு நன்றி தெரிவித்த அவர் கூட்டுத்தாபனத்தை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணத்துடன் அனைவரும் செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் தலைவர் சுதர்ஷன குணவர்தன, ஒலிபரப்பு கூட்டுத்தாபன பணிப்பாளர் நாயகம் ஏரானந்த ஹெட்டியாராச்சி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment