இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அட்சுஹிரோ மோரோரே மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் புதிய கடற்படை தளபதிக்கு ஜப்பான் பாதுகாப்பு ஆலோசகர் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் கடற்படை தளபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை சந்திப்பின் இறுதியில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.