வவுனியா ஏ9 வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பார ஊர்தி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் அதன் சாரதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இன்று (15) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இரும்பகம் ஒன்றிற்கு பொருட்களை ஏற்றிச்சென்ற பார ஊர்தியின் சாரதிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டமையினால் பாரஊர்தி வீதியை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து நிலையில் குறித்த பார ஊர்தியின் சாரதி மரணடைந்திருந்திருந்தமை தெரியவந்தது.
உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அவரது சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.