சர்வதேச விசாரணையே இறுதி முடிவு காணாமல் போனவர்களின் உறவினர்கள் (வீடியோ இணைப்பு)

441 0

vlcsnap-2016-08-30-22h31m17s185காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதாக கூறிக் கொண்டு இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் எந்த விசாரணைகளிலும் நாங்கள் பங்க கொள்ளப் போவதில்லை.சர்வதேச விசாரணைகளுக்கே நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம். இவ்வாறு காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச காணாமல் போனவர்கள் தினத்தினை அடுத்து வடமாகாணத்தில் உள்ள காணாமல் போனவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் நடைபயணிப் போராட்ட நடாத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கருத்து வெளியிடும் போதே மேற்படி விடயத்தினை தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:-
காணாமல் போனவர்களை தேடியலையும் நாங்கள், அரசாங்கத்தினால் எற்படுத்தப்பட்ட ஆணைக்குழுக்களின் முன்பாக எத்தனையோ விசாரணைகளுக்கு முகம் கொடுத்துவிட்டோம்.
ஆனால் எந்தப் பயனும் இதுவரையில் கிடைக்கவில்லை. இந்த விசாரணைகளில் எங்களுடைய உறவுகளை யார் கடத்தியது, யார் கைது செய்தது, யாரிடம் ஒப்படைத்தோம் என்று செல்லிவிட்டோம். இன pஅவ்வாறான ஆணைக்குழுக்கள் விசாரணை செய்ய வேண்டுமானால் நாங்கள் குற்றஞ்சாட்டிய இராணுவத்தை விசாரணை செய்யட்டும்.
எங்களுக்கு உள்@ர் விசாரணைகளின் நம்பிக்கை இல்லை. அவ்வாறான விசாரணைகளுக்கு முகம் கொடுக்க நாங்கள் தயாராவும் இல்லை.
எமக்கு சர்வதேச விசாரணையே தேவை. இவ்வாறான விசாரணையினை கோரியே இன்றைய போராட்டத்தினை நடாத்துகின்றோம்.