திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
சட்டத்தரணியான ஸ்ரீயானி விஜேவிக்ரம, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (15) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் தினேஷ் குணவர்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி (மஹஜன எக்சத் பெரமுண) கட்சியின் உறுப்பினரான ஸ்ரீயானி , கடந்த வாரம் (10) ஜனாதிபதிக்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்திருந்தார்.