பிரெக்சிட் விவகாரம்: தெரசா மேவுக்கு எதிராக அணிதிரண்ட எம்.பி.க்கள்

273 0

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் விவகாரம் தொடர்பாக, பிரிட்டன் பிரதமர் தெரசா மேவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் விவகாரம் தொடர்பாக, பிரிட்டன் பிரதமர் தெரசா மேவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவது குறித்த பொது ஓட்டெடுப்பு கடந்தாண்டு நடந்தது. அதில் 52 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக பிரிட்டன் அறிவித்தது. இந்த தீர்மானத்துக்கு எதிராக இருந்த முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக தெரசா மே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கு ஒப்புதல் பெறுவதற்கான சட்ட மசோதாவை பிரிட்டன் பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையில் பிரதமர் தெரசா மே தாக்கல் செய்தார். ஆனால், இந்த மசோதா தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இம்மசோதா பாராளுமன்ற பிரபுக்கள் சபையில் தாக்கல் செய்யப்பட்ட போதும் அதுவும் தோல்வி அடைந்தது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான மசோதாவில் அந்நாட்டு பிரதமர் தெரசா மேவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான இறுதி உடன்பாட்டுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெறவேண்டும் என்பதை இந்த மசோதா வலியுறுத்துகிறது.

கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி. ஒருவர், தெரசா மேவுக்கு எதிராக இந்த மசோதாவை நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு ஆதரவாக 309 பேரும், எதிர்ப்பு தெரிவித்து 305 பேரும் வாக்களித்தனர். இதனால் இறுதி உடன்பாட்டுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் தெரசா மேவுக்கு எதிராக எம்.பி.க்கள் சிலர் திரண்டுள்ளனர். இது பிரதமர் தெரசா மேவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Leave a comment