நெதர்லாந்து: கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் பலி

341 0

நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் இறந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள மாஸ்ட்ரிச் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நேற்று மாலை பொதுமக்கள் கூடியிருந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை தாக்க தொடங்கினார். மேலும் பலரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த 2 பேர் அங்கேயே இறந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.

தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கத்திக்குத்து தாக்குதலில் இறந்து போனவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment