பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் லெவல் கிராசிங்கை கடந்த பள்ளி பேருந்து மீது ரெயில் மோதி விபபிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் லெவல் கிராசிங்கை கடந்த பள்ளி பேருந்து மீது ரெயில் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த 4 மாணவர்கள் பலியாகியுள்ளனர்.த்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த 4 மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிலாஸ் நகரில் உள்ள பள்ளி பேருந்து மாணவர்களுடன் சென்றுகொண்டிருக்கும் போது, அங்குள்ள ரெயில்வே லெவல் கிராசிங்கை கடந்துள்ளது. ஆனால், பெர்பிகான் நகரில் இருந்து வந்து கொண்டிருந்த பயணிகள் ரெயிலானது திடீரென பேருந்து மீது மோதியது.
இந்த கோர விபத்தில் இரண்டு பாகங்களாக பேருந்து உடைந்து தூக்கி எறியப்பட்டது. பேருந்தில் இருந்த 4 மாணவர்கள் பலியாகியுள்ளனர். 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரெயில் வரும் போது கிராசிங்கில் இருக்கும் சிவப்பு விளக்கை பேருந்து ஓட்டுநர் சரியாக கவனிக்காததே விபத்துக்கு காரணமாக இருக்கும் என போலீசார் முதற்கட்ட தகவல் அளித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.