‘தலபூட்டுவா’ என்ற யானையின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் அரச உயரதிகாரி ஒருவரும் புத்த பிக்கு ஒருவரும் கைது செய்யப்படலாம் எனத் தெரியவந்துள்ளது.
கல்கமுவவில் தந்தங்களைக் களவாடுவதற்காகக் கொல்லப்பட்ட இந்த யானையின் கொலையுடன், கல்கமுவ விவசாயப் பொறியியலாளர் மற்றும் கல்கமுவ, பொல்பித்திகமவில் உள்ள பௌத்த ஆலயம் ஒன்றின் பிக்கு ஆகியோருக்கு தொடர்பு இருக்கலாம் என, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட இருவரையும் முழுமையான விசாரணைகளுக்கு உட்படுத்திய பின்னர் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.
இதே குற்றத்தின் கீழ் இதுவரை மூன்று கிராம சேவகர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.