எமக்கு எதுவும் தேவையில் எமது காணாமல்போன பிள்ளைகளையும் கணவர்மார்களையும் தந்தால் போதுமானது – உறவினர்கள் வேண்டுகோள்

399 0

Slventhiranஎமக்கு எதுவும் தேவையில் எமது காணாமல்போன பிள்ளைகளையும் கணவர்மார்களையும் தந்தால் போதுமானது.அதற்கான நடவடிக்கையினை இலங்கையில் திறக்கப்படவுள்ள காணாமல்போனவர்களின் அலுவலகம் எடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.காணாமல்ஆக்கப்பட்டவர்கள் இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்ற கருத்து இருந்துவருவதாகவும் ஆனால் பொதுமக்களே காணாமல்ஆக்கப்பட்டவர்கள் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும் எனவும் இங்கு வேண்டுகோளை முன்வைத்தனர்.

Sivayoganathan

இன்று செவ்வாய்க்கிழமை காந்தி பூங்கா முன்றிலில் சர்வதேச காணாமல்போனோர் தினத்தினை முன்னிட்டு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காணாமல்போனவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டு தமது உள்ளக்குமுறலை முன்வைத்தனர். மட்டக்களப்பு மாவட்ட காணாமல்போனோர் சங்கம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தொண்டு நிறுவனங்களின் இணையம் என்பன இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தது.இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டு தமது கருத்துகளை முன்வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தனது இரண்டு மகன்களை இழந்துள்ள பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பண்டாரியாவெளியை சேர்ந்த வயோதிப பெண் கருத்து தெரிவிக்கையில்,எனக்கு ஒரு மகளும் இரண்டு மகனும் இருந்தனர்.மகளுக்கு சுகமில்லாத நிலையிலேயே இருந்துவருகின்றார்.இந்த நிலையில் இரண்டு மகன் மாரும் காணமல் ஆக்கப்பட்டுவிட்டனர்.இதன்காரணமாக தான் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவருகின்றேன்.எனக்கு எதுவும் வேணாம்.என்ட பிள்ளைகள் இரண்டையும் கண்டுபிடித்துதந்தால்போதும்.எங்களால் இனியும் அலையமுடியாது எங்களுக்கு நீதிநியாயம்வேணும் என்று கண்ணீர்மல்க தெரிவித்தார்.

IMG_0079

இங்கு சித்தாண்டியை சேர்ந்த பெண்னொருவர் கருத்து தெரிவிக்கையில்,

எனது மகன் 2006-11-30ஆம் திகதி மேசன்வேலைக்கு என்று சென்றவர் இதுவரையில் வீடுதிரும்பவில்லை.எங்கு தேடியும் இதுவரையில் எனது மகன் கிடைக்கவில்லை.சாதாரணதரம் படித்துவிட்டு மேசன் வேலைக்கு சென்றவர்.11வருடங்களாக நான் எனது மகனை தேடிவருகின்றேன்.அவர் இருக்கின்றாரா,இல்லையா என்பது இன்னும் அறியமுடியாத நிலையிலேயே உள்ளேன்.எமது நிலை தொடர்பில் விசாரணை நடாத்துபவர்கள் தமிழ் மொழி தெரிந்தவர்களாக இருக்கவேண்டும்.விசாரணைசெய்பவர்கள் தமிழ் மொழியிலேயே நியமிக்கப்படவேண்டும்.அதற்கு மட்டக்களப்பில் உள்ள தமிழர்களையே நியமிக்கவேண்டும்.காணாமல்போனவர்களை கண்டறியும் காரியாலத்தினை மட்டக்களப்பிலும் திறக்கவேண்டும்.காணாமல்போனவர்கள் இயக்கங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கின்றார்கள்.எமது பிள்ளைகள் எந்த இயக்கத்தினையும் சேராதவர்கள்.வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

IMG_0072

காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைக்கு வாங்க என்று அழைக்கப்பட்டோம் சென்றோம்.பொலிஸில் இருந்து கடிதமும் கொண்டுவரச்சொன்னார்கள் கொண்டுவழங்கிவிட்டு வந்தோம் .இப்போது கடிதத்தில் மரணச்சான்றிதழ் அனுப்பப்பட்டுள்ளது.எமது பிள்ளைகள் எங்கு உள்ளது.அவர்களை மீட்டுத்தாருங்கள் என்றே நாங்கள் அங்கு சென்றோம்.ஆனால் அவர்களினால் எங்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என கொக்கட்டிச்சோலையை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்தார்.எங்களுக்கு எதுவும் வேண்டாம் எனது பிள்ளையை உயிருடன் மீட்டுத்தாருங்கள் எனவும் அவர் விடுத்தார்.

2007ஆம் ஆண்டு கொக்கட்டிச்Nசுhலை மாவடிமுன்மாரி பகுதிக்கு வயல் அறுவடைக்கு சென்ற எனது கணவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை.அவரை யார் கடத்திச்சென்றார்கள் என்பது கூட தெரியாது.அவர் இருக்காரா இல்லையா என்று தெரியாத நிலையில் எங்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை முனைக்காடு பகுதியை சேர்ந்த சுகிர்தரன் புவனேஸ்வரி என்னும் பெண் தெரிவித்தார்.எனது மகனுக்கு 11வயது பூர்த்தியாகின்றது. ஆறாம் ஆண்டு கற்றுவருகின்றார்.எனது தந்தையே எனது மகனுக்கு தேவையானவற்றை செய்துவருகின்றார்.எனது கணவரின் நிலைமை தொடர்பில் தீர்க்கமான முடிவு ஒன்றை இந்த அரசாங்கம் வழங்கவேண்டும் என்றார்.

IMG_0069

எனக்கு இரண்டு பிள்ளைகள். மேசன் வேலைக்கு சென்று வீடு திரும்பியவர் வீட்டில் வைத்து வெள்ளைவானில் வந்தவர்களினால் கடத்திச்செல்லப்பட்டார்.எனது கணவன் இல்லாமல் குழந்தைகளை வளர்ப்பதில் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதாக பண்டாறியாவெளியை சேர்ந்த திருமதி மேகநாதன் தெரிவிக்கின்றார்.எனது பிள்ளைகளின் கல்விக்காக நான் தினமும் கூலித்தொழிலுக்கு சென்றுவருவதாகவும் கண்ணீருடன் அவர் தெரிவிக்கின்றார்.எனது பிள்ளைகளின் மனம் பாதிப்படையக்கூடாது என்பதற்காக நான் கஸ்டங்களை தாங்கிக்கொண்டு எனது பிள்ளைகளை கற்பித்துவருகின்றேன்.எனது கணவரை கண்டுபிடித்து தாங்கள் என கண்ணீருடன் தெரிவித்தார். காணாமல்போனவர்கள் அலுவலகம் திறப்பது நல்ல விடயம்.காணாமல்போனவர்கள் என்றால் இயக்கத்தில் இருந்து இறந்தவர்கள் என்றே சிலர் நினைக்கின்றனர்.எனது வீட்டில் இருந்தவரே கடத்திசெல்லப்பட்டார்.இதுவரையில் எந்த முடிவும் இல்லாமலேயே இருக்கின்றோம். எமக்கு எந்த உதவியும் இதுவரையில் செய்யப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை வரவுள்ள ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான்கீமூனை திருப்பதிப்படுத்தும் வகையிலேயே காணாமல்போனவாகள் அலுவலகமும் சட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளதாக காணாமல்போனோர் சங்க உறுப்பினரும் காந்திசேவா சங்க தலைவருமான கே.செல்வேந்திரன் தெரிவித்தார்.

ஏற்கனவே காணாமல்போனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரணச்சான்றிதழை மீளப்பெற்றுக்கொண்டு காணாமல்போனவர்களுக்கான சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கையினை இந்த அரசாங்கம் எடுக்கவேண்டும்.காணாமல்ஆக்கப்பட்டார்கள் என்ற உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்தை வழங்க இந்த அரசாங்க நடவடிக்கையெடுக்கவேண்டும்.

1988 ஆம் ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டுவரையில் காணாமல்ஆக்கப்பட்டர்கள் தொடர்பில் ஆராயுமு; வகையில் பாலகிட்ணர் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.அந்த ஆணைக்குழுவின் அறிக்கையின்படி 1219பேர் காணாமல்ஆக்கபட்டிருந்தனர்.அன்று இன்றுள்ள ஐ.தே.க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி காலத்திலேயே இவர்கள் காணாமல்ஆக்கப்பட்டனர்.90ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம் ஐ.தே.க.ஆட்சிக்காலத்தில் 677பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தமிழர்கள் காணாமல்ஆக்கப்பட்டனர்.அதன்பின்னர் 1996ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரைக்கும் தொடர்ந்து மக்கள் காணாமல்ஆக்கப்பட்டிருந்தனர்.நாங்கள் மேற்கொண்ட பதிவுகள் அடிப்படையில் 2200பேர் காணாமல்ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காணாமல்போனோர் தொடர்பில் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்காக நல்லாட்சி அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவிப்பதுடன் காணாமல்போனோர் அலுவலகத்தினை மட்டக்களப்பு மாவட்டம் உட்பட ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தொண்டு நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்தார்.