முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புக் குளத்தின் அணைக்கட்டில், இராணுவத்தினர் புதிய காவலரண் ஒன்றை அமைத்து வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளங்களில் ஒன்றான தண்ணிமுறிப்புக்குளத்தில் தமிழ், முஸ்லிம் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தண்ணிமுறிப்புக்குளத்தின் கீழ் உள்ள விவசாயச்செய்கை நிலங்களுக்கும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புக் குளத்தின் அணைக்கட்டில், இராணுவத்தினர் புதிய காவலரண் ஒன்றை அமைத்து வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளங்களில் ஒன்றான தண்ணிமுறிப்புக்குளத்தில் தமிழ், முஸ்லிம் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தண்ணிமுறிப்புக்குளத்தின் கீழ் உள்ள விவசாயச்செய்கை நிலங்களுக்கும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பொதுமக்களின் வாழ்வாதாரத்துக்கும் அன்றாடத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற இக்குளத்தில் படையினர் சில கட்டுப்பாடுகளை விதித்து வருகின்ற நிலையில், தற்போது குளத்தின் அணைக்கட்டுப் பகுதியில் காவலரண் ஒன்றையும் அமைத்து வருகின்றனர். நல்லாட்சிக் காலத்தில் ஒரு சிவில் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் உள்ள இக்குளத்தில், இராணுவத்தினர் காவலரண் அமைப்பது, பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.