சட்டவிரோதமான முறையில் விமானப் பயணி ஒருவர் மூலம் டுபாய் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட 3 கோடி 20 இலட்சம் பெறுமதியான 5.07 கிலோ தங்க ஆபரணங்களுடன் ஒருவர் கட்டுநாயக்கவிமான நிலைய சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தங்க ஆபரணங்கள் சாக்லேட் நிரப்பியிருந்த கைப்பையினுள் மிகவும் சூட்சுமமாக முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகச் சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.