எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கலாம் ! – வளிமண்டலவியல் திணைக்களம்

250 0

எதிர்வரும் நாட்களில் மழைவீழ்ச்சி அதிகமாகக் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும், மத்திய, சபரகமுவ, மேல், வடமேல் மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களுக்கும் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் பல பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் எனவும் மேல், வடமேல், சபரகமுவ, மத்திய மாகாணங்கள் காலை வேளைகள் பனிமூட்டத்துடன் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment