உத்தியோகபூர்வ விஜயம் மேகொண்டு இலங்கை வந்துள்ள இந்திய விமானப்படையின் பிரதானி எயார் சீப் மார்ஷல் பிரெண்டர் சிங் தனோஆ மற்றும் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் சந்திப்பை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறப்பட்டன.
குறித்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அசோக் ராம் உள்ளிட்ட இந்திய விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.