ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தியது தொடர்பில்இராணுவத்துக்கு தொடர்பில்லையாம்!

280 0

முல்லைத்தீவு தண்ணிமுறிப்புப் பகுதியில் சிங்கள மயமாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இராணுவம், பொலிஸால் சுற்றிவளைக்கப்பட்டு அரை மணித்தியாலங்களுக்கு மேல் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் இராணுவம் தொடர்புபடவில்லை என இராணுவச் பேச்சாளர் பிரிகேடியர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“இராணுவ சீருடையின்றிய சிலர், ஊடகவியலாளரை விசாரணைக்கு உட்படுத்தியதாக எமக்கு முறைப்பாடு கிடைத்தது. இது தொடர்பில் முல்லைத்தீவு கட்டளைத் தளபதியிடம் விசாரித்தபோது, தாங்கள் இந்தச் சம்பத்துடன் தொடர்புபடவில்லை எனத் தெரிவித்தார். ஆகையால், சிவிலுடையில் சென்றவர்கள் இராணுவத்தினர் இல்லை என்பதை உறுதிபடக் கூறுகின்றோம். எனினும், இச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடைபெறும்” எனவும், பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வலயம் தொடர்பாகவே தாம் தெளிவுபடுத்தியதாகக் குறிப்பிட்ட பொலிஸ் தரப்பு, சுமூகமாக அவ்விடயம் கலந்துரையாடப்  -பட்டதை அடுத்து, ஊடகவியலாளர்களே தாம் எடுத்த புகைப்படங்களை அழித்துவிட்டுத் திரும்பியதாகவும் மேலும் கூறியது.   அத்தோடு, இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்படுமிடத்து, விசாரணைகள் முடுக்கப்படும் எனவும், பொலிஸ் தரப்பினர் தெரிவித்தனர்.

Leave a comment