சர்வதேச காணாமல் போனவர்கள் தினமான இன்று வடமாகாணத்தில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி ஜ.நாவை நோக்கிய நடைபயனம் போராட்டம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
யாழ்.மாவட்டச் செயலகத்திற்க முன்பாக இன்று காலை ஒன்று கூடிய காணாமல் போனவர்களின் உறவினர்கள் அங்கிருந்து நடைபயணமாக கோவில் வீதி நல்லூர் பகதியில் அமைந்துள்ள ஜ.நாவின் அலுவலகத்திற்கு வருகைதந்தனர்.
அங்க வந்த அவர்கள் ஜ.நா அலுவலகத்தினை முற்றுகையிட்டு, தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறும், இவ்விடயத்தில் உள்ள நடமுறைகளை தாங்கள் புறக்கணிப்பதாகவும், தமக்கு சர்வதேச தலையீடே தேவை என்பதையும் வலியுறுத்தி கோசங்களை எழுப்பியிருந்தனர்.
அத்துடன் தமது போராட்டத்தின் கோரிக்கை தொடர்பான மகஜர் ஒன்றினையும் அங்கிருந்த ஜ.நா அலுவலகத்தின் ஊடாக பான்கீ மூன்க்கு அனுப்பிவைத்திருந்தனர்.