தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதே ஒழிய பேனாக்களின் குருதி மை வற்றாது எழுதிக் கொண்டுதான் இருக்கின்றன. போராட்ட காலத்தில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள், கடத்தப்பட்டார்கள். நாட்டை விட்டு ஒடவும் நிர்பந்திக்கப்பட்டார்கள்.
“நல்லாச்சி” எனக் கூறப்படும் அரசாங்கத்தில் “தகவல் உரிமை சட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்டு, ஊடக சுகந்திரம் பேணப்படுவதாக கூறப்படுகின்றது.
முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அரச படையினராலேயே ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். ஆனால் இன்றைய அரசாங்கத்தில் யாரால் தாக்கப்படுகின்றார்கள் என தெரியாத அளவுக்கு இரகசியமாக தாக்கப்படுகின்றார்கள்.
2017 ஆம் ஆண்டு மாவீரர் நாள் தாயகம் எங்கும் அனுட்டிக்கப்பட்டதன் பின் மீண்டும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் அரங்கேறுகின்றன.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிராந்திய ஒலிபரப்பாக செயற்படும் யாழ்.எப் .எம் வானொலியின் பிரதம செய்தியாளரான எஸ்.மனோகரன் டிசம்பர் 02 ஆம் திகதி சாவகச்சேரியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு செல்லும் போது அவருடைய வாகனத்தை மறித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 03 ஆம் திகதி யாழ். பொன்னாலைப்பகுதியில் வைத்து மூத்த ஊடகவியலாளர் ந..பொன்ராசா தாக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி – பரந்தன் பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் டிசம்பர் 08 ஆம் திகதி இரவு 8.42 மணியளவில் மாங்குளம் – பாண்டியன்குளம் பகுதியில் வைத்து வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.
டிசம்பர் 09 ஆம் திகதி முல்லைத்தீவு தண்ணீர்முறிப்பு சிங்கள மயமாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தியதுடன் இவ் ஊடகவியலாளர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளிகளை அழித்ததுடன் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.
யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் சுதந்திர ஊடகவியாளர் ரவிசாந் இனம் தெரியாதவர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
டிசம்பர் 10 ஆம் திகதிக்குள் தாயப்பகுதியில் ஊடகவியாளர்கள் தாக்தலுக்கும் அசசுறுத்தலுக்கும் உள்ளாகி உள்ளனர்.
மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக உள்ளது.