ஹிக்கடுவையில் ரஷ்யப் பிரஜை பலி

667 0

ஹிக்கடுவை – திரானகம பகுதி கடலில் நீராடச் சென்ற ரஷ்யப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திரானகம பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றுக்கு அருகிலுள்ள கடலில் நீராடச் சென்ற வேளை குறித்த ரஷ்யப் பிரஜை மற்றும் அவரது உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மனைவி ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து ரஷ்யப் பிரஜையின் சடலம் பிரதேச மக்களால் மீட்கப்பட்டுள்ளது.

52 வயதான குறித்த நபரின் சடலம் காலி – கராபிடிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment