தரமற்ற பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனை என்பவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை முன்னெடுக்க மத்திய சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது.
பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் இறக்குமதிகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் குறித்த சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மைக்றோன் 20 இற்கும் குறைந்த நிறையுடைய பொலித்தீன் விற்பனைக்கு அரசாங்கம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.