உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் தற்பொழுது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்றும் (10) நாளையும் (11) இடம்பெறும் எனவும் நாளை மறுதினம் தேர்தல்கள் அலுவலகத்திடம் அவை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கட்சிக்கன்றி வேறு கட்சிகளுக்கு ஆதரவு வழங்கும் நபர்கள் குறித்து தேர்தலின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக்கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.