அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் இஸ்ரவேலின் தலைநகராக ஜெரூசலத்தை அறிவித்தமையை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை பாராளுமன்றத்திலுள்ள பலஸ்தீன் நட்புறவு சங்கம் அறிவித்துள்ளது.
விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் இதனை தெரிவித்துள்ளது.
ஜெரூசலத்தை இஸ்ரவேலின் தலைநகராக்குவதற்கும் டெல்அவிவிலுள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலத்துக்கு மாற்றுவதற்கும் டிரம்ப் எடுத்துள்ள தீர்மானத்துக்கு தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பரிந்துரைகளுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்துள்ள தீர்மானம் மத்திய கிழக்கு சமாதானத்துக்கு பெரும் சவாலாகும் எனவும் அச்சங்கம் கூறியுள்ளது.