இலங்கை வரலாற்றை பாடசாலைக் கல்வியிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்லாந்து நாட்டிலுள்ள பாடசாலை பாடத்திட்டத்தில் அந்நாட்டின் வரலாறு இடம்பெறாது காணப்படுவதனாலேயே இலங்கையிலும் அதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாக பேராசிரியர் ஒருவர் இந்த தகவலைக் கசியவைத்துள்ளார்.
இவ்வாறு வரலாற்றுப் பாடத்தை பாடசாலை கலைத்திட்டத்திலிருந்து நீக்குவது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.