ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் இணைந்தால் கூட்டு எதிர்க்கட்சியினரும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களாக மாற்றம் பெறுவர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
களனி பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார். அமைச்சுப் பதவிகளை துறந்து பேச்சுவார்த்தைக்கு வந்தால் , இணைவது தொடர்வில் ஆராய்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.